நாம் கடையில் வாங்கி வரும் காய்கறிகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க அதனை நாம் ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாப்போம். ஆனால் நம்மில் சிலர் அந்த காய்கறிகள் அனைத்தையும் அப்படியே மொத்தமாக வைத்து விடுவோம். ஆனால் சில காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து வைப்பதே உடலுக்கு கேடு விளைவிக்கும். இந்த பழங்கள் அல்லது காய்கறிகள் இருந்து வெளிப்படும் சில வாயுக்கள் நமக்கு கேடு விளைவிக்கும். அப்படி எந்தந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து வைக்கக் கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளரிக்காய்:
நீங்கள் வெள்ளரிக்காயைவெளியில் வைக்கும் போது அல்லது பிரிட்ஜில் வைக்கும் போது எதையும் அதனுடன் சேர்த்து வைக்கக் கூடாது. ஏனென்றால் வெள்ளரிக்காயை முலாம் பழம், வாழைப்பழம் மற்றும் தக்காளியுடன் சேர்த்து வைத்தால் அது எத்திலீன் வாயுவை விரைவில் வெளியிட்டு பழம் விரைவில் பழுத்து விடும். எனவே தக்காளி போன்ற காய்கறி கள் விரைவில் அழுகிப் போக வாய்ப்பு உள்ளது. எனவே ஃப்ரிட்ஜில் வெள்ளரிக்காயை வைப்பதாக இருந்தால் தனியாக வைப்பது நல்லது.
பூசணிக்காய் மற்றும் ஆப்பிள்கள்:
பூசணிக்காய், ஸ்குவாஷ் போன்ற காய்கறிகளை ஆப்பிள் மற்றும் பேரிக்காய் போன்ற பழங்கள் உடல் நாம் வைப்பது வழக்கம். ஆனால் ஆராய்ச்சி படி ஆப்பிள் மற்றும் பேரிக்காய் ஆகிய இரண்டுமே பூசணிக்காயை விரைவில் கெட்டுப்போக வைத்து விடுமாம். அதனால் நீங்கள் பூசணிக்காயை சேமிப்பது ஆக இருந்தால் 55 டிகிரி பாரன்ஹீட்டில் சேமித்து வையுங்கள். அப்படி வைத்தால் ஆறு மாதங்கள் வரை பூசணிக்காய் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.
சக்கரவள்ளி கிழங்கு மற்றும் உருளைக்கிழங்கு:
பொதுவாக வேர் கிழங்குகளை தனியாக ஒரு பையில் போட்டு வைப்பது நல்லது. ஏனென்றால் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதனால் கிழங்கு வகைகளை எப்போதும் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது.
ஆப்பிள், ஆரஞ்சு பழங்கள்:
ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை ஒன்றாக சேர்த்து வைக்கக் கூடாது. ஏனென்றால் இதில் இருந்து வெளியேறும் எத்திலின் வாயு சீக்கிரமே கெட்டுப் போக வாய்ப்புள்ளது. அதனால் இந்த இரண்டு பழங்களையும் பிரிட்ஜில் வைப்பதாக இருந்தால் தனித்தனியாக தள்ளிவைப்பது நல்லது. ஆரஞ்சு பழங்களை நன்றாக காற்று உள்ளே செல்லக்கூடிய துளை கொண்ட பேக்கில் போட்டு வைப்பது நல்லது. பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்தால் இந்த பலன்கள் நீண்ட நாட்கள் தாங்காது.
வெங்காயம், உருளைக்கிழங்கு:
நாம் பொதுவாக உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை ஒரே கூடையில் போட்டு வைப்பது வழக்கம். இதனை நீங்கள் ஒன்றாக வைப்பதாக இருந்தால் தனித்தனியாக வைப்பதுதான் நல்லது. வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டுக்குமே நல்ல காற்றோட்டமான இடம் தேவை. அப்போதுதான் இவை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.