Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் விலையை குறைக்க தமிழக அரசு திடீர் முடிவு?…. வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…..!!!!

இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் விலை அண்மையில் அதிகரித்துள்ளது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகியது. அதுமட்டுமில்லாமல் சமையல் சிலிண்டர் விலையும் ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. இதனால்  இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மே 22 முதல் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்த வகையில் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 50 ரூபாயும் குறைக்கப்பட்டது. பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து அறிவித்தது. ஆனால் தமிழகம் குறைக்கவில்லை. இந்நிலையில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணமாக தேர்தல் வாக்குறுதியின் படி பெட்ரோல் விலையை குறைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே விரைவில் தமிழகத்திலும் பெட்ரோல் விலை குறையும் என அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Categories

Tech |