உங்கள் துணி கலர் போகாமல் வாசனையாக இருக்க வீட்டில் உள்ள இந்த இயற்கை பொருளை பயன்படுத்தினால் போதும். அதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
துணி துவைப்பதற்கு கையளவு சோப்புத்தூள் எடுத்து தண்ணீரில் நனைத்து வாசனைக்கு அலசும் போது வாசனை லீக்விட்டை விட்டால் துணி மிகவும் வாசனையாக இருக்கும். ஆனால் அது சிறிய நேரத்திற்கு மட்டுமே பலன் தரும் . உங்கள் ஆடைகள் மீதான நறுமனத்துக்கும், கிருமிகளை தடுப்பதற்கும் 100% உத்தரவாதம் தரும் என்று கூற முடியாது. ஆனால் இதை செய்தால் உத்தரவாதம் கட்டாயம் கிடைக்கும். தினமும் அணியும் ஆடை முதல் விழாவுக்கு அணியும் ஆடை வரை அனைத்துமே முக்கி யமானதுதான். ஆடை பளிச்சென்று அழுக்கில்லாமல் இருக்க வேண்டும் என்பதும், அதில் கிருமிகளும் சேராமல் இருக்க வேண்டும் என்பதும் மிகவும் முக்கியம்.
அதே நேரம் வியர்வை வாடை ஒருபுறம் என்றால் வியர்வையோடு இணைந்து துணியின் ஈரவாடை ஒருவித நாற்றத்தை ஏற்படுத்தும். அன்றாடம் உடுத்தும் உடைகள், உயர்ரக ஆடைகள், தண்ணீரில் போடாமல் வைத்திருக்கும் ஆடைகள் என்று விதவிதமான ஆடைகளை வாங்கி அடுக்கி வைத்திருக்கும் இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், இதைதான் வீட்டுப் பராமரிப்பு என்று கூறுகிறார்கள். துணியில் வீசும் கெட்ட வாடையை போக்கை இயற்கையாக எப்படி பராமரிக்கலாம் என்பதை பார்க்கலாம். துவைக்கும்போது வாசனை தரும் சோப்பு தூள் அல்லது சோப்பு திரவத்தை பயன்படுத்துவது வழக்கம். அதிகப்படியாக பயன்படுத்தும் போது இவை துணிகளில் வாசத்தை உண்டாக்கும்.
அதேநேரம் இந்த வாசனைகள் அனைத்தும் அந்த துணியை உடுத்தும் போது வராது. இன்னும் சிலர் துணிகளில் வாசனை வரவேண்டுமென்று அதிகப்படியாக சென்ட் அடித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் நல்ல நறுமணத்துடன் வீசும் துணிகள் நேரம் செல்ல செல்ல வாடையோடு துவைக்கும்போது ஆடைகளில் ஒட்டிக்கொள்ளும். துணிகளில் சென்ட் அடிப்பதை தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால் துவைப்பதற்கு முன்பு சுத்தமான நீரில் அரை மணி நேரம் ஊற வையுங்கள். அதிகப்படியான அழுக்குகள் இருந்தால் அதை விட அதிக நேரம் நீரில் ஊற வையுங்கள். சோப்பு தூள் அல்லது சோப்பு திரவம் உடன் எலுமிச்சை சாறு சேர்த்து ஊறவிடுங்கள்.
வாசனை அதிகமுள்ள சோப்புக்கள் பயன்படுத்துவது துணிகளில் ஆயுளை நீட்டிக்காது. அரை மணி நேரம் ஊறியதும் வாஷிங்மெஷினில் போடுவதாக இருந்தால் எலுமிச்சை சாற்றை வடிகட்டி ஒரு மடக்கு தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறு கலந்து சுற்றிலும் தெளித்தபடி ஊற்றி துணியை துவைத்து எடுங்கள். அலசும் போது கெமிக்கல் அதிகம் கலக்காத ஷாம்புவை நீரில் கரைத்து சேர்த்து அலசி எடுங்கள். நுரை வந்தாலும் மூன்று முறை அலசி எடுத்தால் போதுமானது. இறுதியாக அலசும் பொழுது ஷாம்பு சேர்க்க வேண்டாம். சூரிய ஒளியில் துணிகளை ஊறவைக்கும் போது அவற்றில் இருக்கும் கிருமிகள் வெளியேறிவிடும். சூரிய ஒளி இல்லாத அபார்ட்மென்ட் வாசிகள் காற்றோட்டம் உள்ள இடங்களில் துணிகளை காய வைத்து எடுங்கள்.
துணிகளை காய விடும்போது சுருக்கமின்றி போடுவதும், மடைக்கும்போது நீவி மடிப்பதும் நல்லது. சூரிய ஒளியில் காய வைக்கும் போது துணிகளை திருப்பி போடுவதும் குறிப்பிட்ட இடைவெளியில் அதை எடுப்பதும் துணிகளின் ஆயுளையும் வண்ணத்தையும் அதிகரிக்க்கும். துணிகளை மடிப்பு கலையாமல் அடுக்கி வைக்கும்போது துணிகளுக்கு நடுவில் எலுமிச்சைசாறு ஊறவைத்த காட்டன் உருண்டையை வையுங்கள். அதற்கு மாறாக நறுமண எண்ணெய் கலந்த காட்டன் உருண்டையும் பயன்படுத்தலாம். காபி கொட்டையை வாங்கி பொடி செய்து திக்காக கரைத்து காட்டனை அதில் ஊற வைத்து அதை நிழலில் உலர்த்தி எடுத்து அலமாரிகளில் துணிகள் வைக்கும் இடங்களில் மூலைக்கு ஒன்று வைத்துவிடுங்கள். துணி மிகவும் வாசனையாக இருக்கும்.