Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. கனமழை….விரைவு ரயில் சேவைகள் ரத்து….வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக, அதிகமான மழைப்பொழிவு இருந்து வருகிறது. அவ்வாறு, அசாம் மாநிலத்தில் கூடுதல் மழைபொழிவின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அசாமில் உள்ள பொது மக்களின் வாழ்வாதாரம், இக்கனமழையின் காரணமாக பாதிப்படைந்துள்ளது.  மேலும் 4.03 லட்சம் மக்கள் அசாம் மாநிலத்தில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இருந்து அஸ்ஸாம்  மாநிலத்துக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கோவை – சில்சார் விரைவு ரயிலானது ரத்து செய்யப்பட உள்ளது. மேலும் இந்த மழை வெள்ளத்தின் காரணமாக எந்தெந்த ரயில் சேவைகள் தடை செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பையும் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அவ்வாறு மே 29 மற்றும் ஜூன் 5, 12, 19, 26 ஆகிய 5 தேதிகளும் கோவையில் இருந்து இரவு 9.45 மணிக்கு திருப்பூா், ஈரோடு, சேலம் போன்ற வழித்தடத்தின் வழியாக சில்சாா் வரை செல்லும் கோவை – சில்சாா் விரைவு ரயிலானது (எண்: 12515)  தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ரயிலானது அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தி பகுதி முதல் சில்சாா் இடையே உள்ள பகுதிகளுக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவை – சில்சாா் விரைவு ரயிலானது கோவை முதல் குவாஹாத்திக்கு இடையே உள்ள பகுதிகளில் மட்டும் இயங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மே 24, 31 மற்றும் ஜூன் 7,14, 21,28 ஆகிய 6 நாட்களும், சில்சாா் – கோவை விரைவு ரயிலானது (எண்:12516) சில்சாா் பகுதி முதல் குவாஹாத்திக்கு இடையேயான பகுதிக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.

Categories

Tech |