தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் என்று ஒரு கிலோ தக்காளி விலை 85 ரூபாயாக குறைந்துள்ளது. சில்லரை விற்பனையில் பல இடங்களில் 90 ரூபாய்க்கு மேல் தக்காளி விற்பனை செய்யப்படுகின்றது. வெங்காயம் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. அதாவது ஒரு கிலோ வெங்காயம் குறைந்த பட்சம் பத்து ரூபாய்க்கும் அதிகபட்சம் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதனை போலவே மற்ற காய்கறிகள் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
காய்கறி விலைப் பட்டியல்!
தக்காளி – ரூ.85
வெங்காயம் – ரூ.15
அவரைக்காய் – ரூ.90
பீன்ஸ் – ரூ.100
பீட்ரூட் – ரூ.35
வெண்டைக்காய் – ரூ.60
நூக்கல் – ரூ.30
உருளைக் கிழங்கு – ரூ.30
முள்ளங்கி – ரூ.15
புடலங்காய் – ரூ.30
சுரைக்காய் – ரூ.30
பாகற்காய் – ரூ.50
கத்தரிக்காய் – ரூ.40
குடை மிளகாய் – ரூ.45
கேரட் – ரூ.40
காளிபிளவர் – ரூ.25
சவுசவு – ரூ.16
தேங்காய் – ரூ.25
வெள்ளரிக்காய் – ரூ.20
முருங்கைக்காய் – ரூ.60
இஞ்சி – ரூ.40
பச்சை மிளகாய் – ரூ.25
கோவைக்காய் – ரூ.35