Categories
உலக செய்திகள்

கனடாவில் கடும் சூறாவளி புயல்… 8 நபர்கள் உயிரிழப்பு…. இருளில் தவிக்கும் 2 லட்சம் மக்கள்…!!!

கனடா நாட்டில் கடும் சூறாவளி புயலில் சிக்கி எட்டு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் கியூபெக், ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் கடும் சூறாவளி புயல் ஏற்பட்டது. இதில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 132 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியிருக்கிறது. இதனால் மின் கம்பங்களும், மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மேலும், இதில் சிக்கி 8 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருட்டோ தெரிவித்ததாவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு  அரசாங்கம் உதவ தயாராக இருக்கிறது. கடும் சூழலில் பணியாளர்கள், மின் வினியோக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

இந்த புயல் காரணமாக மின் வினியோகம் தடைபட்டு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருளில் தவித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, மின் விநியோக நிறுவனம், சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு மின் இணைப்புகளை சரி செய்திருக்கிறது.

இருப்பினும், அதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்போதும் மின் வசதியில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம், அனைத்து மக்களுக்கும் மின் விநியோகம் சரியாக கிடைக்க புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடைய பல நாட்கள் தேவைப்படும் என்று தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |