கொரோனா பரவலால் கடந்த இரண்டு வருடங்களாக திறக்கப்படாமல் இருந்த சியோலின் முக்கிய இரவு நேர சந்தை மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது.
தென்கொரியாவில் சுற்றுலா பயணிகளுக்காக மற்றும் சிறிய விற்பனையாளர்களுக்கு அதிக அளவில் வணிக வாய்ப்புகளை கொடுக்க பல பகுதிகளில் அரசாங்கத்தின் சியோல் இரவு சந்தைகள் செயல்பட்டு வந்தது.
ஆனால், கொரோனா காரணமாக 2 வருடங்களாக செயல்படாமல் இருந்த அந்த சந்தையை மீண்டும் தொடங்க அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இரவு சந்தைகளில் கலந்துகொள்ள விரும்பும் விற்பனையாளர்களையும், வர்த்தகர்களையும் ஆள் சேர்க்க தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மாலை 6:00 மணியிலிருந்து இயங்கும். சியோங்கி பிளாசா, ஹாங்காங் பார்க் மற்றும் டோங்டே முன் டிசைன் பிளாசா போன்ற இடங்களில் நள்ளிரவு நேரம் வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், உள்ளூர் வணிகங்களை அதிகப்படுத்துவதற்கும், இளம் வணிக உரிமையாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுப்பதற்கும் இந்த சந்தை பயன்படும் என்று கூறியுள்ளனர்.