Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் விஜய்யுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்…. யார் தெரியுமா…?

விஜய் படத்திற்கு மீண்டும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட்  திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. இருப்பினும் இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடித்து வருகின்றார். ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் சரத்குமார், ஷியாம், பிரபு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

தமிழ் தெலுங்கில் பிரபல இசையமைப்பாளரான தமன்  இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக யுவன்சங்கர்ராஜா விஜய்யுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசியிருக்கிறார். விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அதன்பின் அவர் விஜய் படங்களுக்கு இசை அமைக்க வில்லை. அதனால் சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா மீண்டும் விரைவில் விஜயுடன் இணைந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் விஜய்  மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் விஜய் படத்திற்கு யுவன் இசையமைக்க இருப்பதாக பேசி வந்தனர். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. இந்த நிலையில் தற்போது யுவன் அவர்களே விரைவில் விஜய் படத்திற்கு இசை அமைப்பேன் என்று கூறியிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |