Categories
பல்சுவை

60 மணி நேரம் கடலுக்குள் உயிர் வாழ்ந்த நபர்…. உங்களால் நம்ப முடிகிறதா….? இதோ முழு தகவல்….!!

நைஜீரியாவை சேர்ந்த ஹாரிஸ் என்ற சமையல்காரர் 60 மணி நேரம் கடலில் உயிர் வாழ்ந்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? ஆம்.  அட்லாண்டிக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு கப்பல் திடீரென விபத்துக்குள்ளானது. அதில் இருந்து ஹாரிஸ் மட்டும் தப்பி விடுகிறார். அது எப்படி என்றால் அவர் இருந்த இடத்தில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்திருக்கிறது. மேலும் சுவாசிக்க ஏதுவாக அவருக்கு காற்றும் கிடைத்திருக்கிறது.

அந்தக் கப்பலில் உள்ள அனைவரும் இறந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் மீட்பு பணியாளர்கள் மூலம் கடலில் மிதந்து கொண்டிருந்த மனித உடல்களை எடுப்பதற்கான பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அந்த சமயத்தில்தான் ஹரிசை 30 மீட்டர் ஆழத்தில் இருந்து மீட்கின்றனர். அப்போது அவர் உறைந்துபோன நிலையில் கிட்டத்தட்ட மூச்சு கூட விட முடியாமல் இருந்துள்ளர். ஆனால் மீட்பு குழுவினர் அவருக்கு உரிய சிகிச்சை அளித்ததனால் இறுதியாக அவர் பிழைத்துக் கொண்டார். அந்த விபத்தில் இவர் மட்டும்தான் பிழைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |