பிரான்ஸ் நாட்டில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளாகி 5 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இருக்கும் கிரெனோபில் என்னும் நகரத்திற்கு அருகில் இருக்கும் வெர்சௌட் விமான நிலையத்திலிருந்து 5 நபர்களுடன் ஒரு சுற்றுலா விமானம் சென்றிருக்கிறது. அதனைத் தொடர்ந்து சில மணி நேரத்திலேயே அந்த விமானம் திடீரென்று விபத்துக்குள்ளானது. எனவே உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தீயணைப்பு படையினர் 60 பேர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது, அங்கு குழந்தை உட்பட ஐந்து நபர்களின் உடல்கள் கண்டறியப்பட்டது. அதில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகாரிகள், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.