Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு… அகவிலைப்படி வருவதில் புதிய சிக்கல்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17% லிருந்து 28% உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் மாதத்தில் 31% உயர்த்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 3% அதிகரித்து தற்போது 34% ஆக உள்ளது. ஆனால் 2020 ஆம் ஆண்டு ககொரோனா பரவல் காரணமாக அகவிலைப்படி உயர்வுக்கான 18 மாத நிலுவை தொகையை வழங்கப்படவில்லை.

அதுமட்டுமில்லாமல்  18 மாத நிலுவை தொகையை விரைவில் மத்திய அரசு வெளியிடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நிலுவைத் தொகை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அகவிலைப்படி நிவாரணத்தை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்து விட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மொத்த டிஆர் மற்றும் டிஏ நிலுவை தொகை ரூ.34 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஓய்வூதிய விதிகளை மறு ஆய்வு செய்வதற்கான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் நிலைக்குழுவின் 32வது கூட்டத்தில் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியது, ஓய்வூதியதாரர்களின் நலனை கவனித்து வருவதாகவும், அவர்களின் குறைகளை பல நிலைகளை தீர்த்து வருவதாக கூறினார். அதே நேரத்தில் நிலுவை தொகை வழங்கப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Categories

Tech |