Categories
தேசிய செய்திகள்

சிமெண்ட், எஃகு விலை…. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன குட் நியூஸ்….!!!!

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பால் பணவீக்கமானது அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக இப்போது பெட்ரோல், டீசல் மீதுள்ள கலால் வரியை மத்திய அரசு குறைத்து இருக்கிறது. இதன் காரணமாக பெட்ரோல் விலை சுமார் ரூபாய் 9.5 என்ற அளவிற்கும், டீசல் ரூபாய் 7 என்ற அளவிற்கும் குறைந்து உள்ளது.  இதையடுத்து சிமெண்ட்,எஃகு போன்றவற்றின் விலைகளை குறைக்கும் அடிப்படையில் மத்திய அரசானது முக்கியமான முடிவை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பெட்ரோல் மற்றும் டீசல் தவிர்த்து சிமென்ட், எஃகு, இரும்பு போன்றவற்றின் விலையை குறைக்கவும் அரசு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது. இதில் இரும்பு, எஃகு மற்றும் மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் அடிப்படையில் அதன் மீதான சுங்கவரியில் மாற்றம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிமெண்ட், எஃகுவிலைகள் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது, “மூலப்பொருட்கள் சப்ளை செய்பவர்கள் மற்றும் இடைத் தரகர்கள் இரும்பு, எஃகுக்குரிய விலையை குறைக்க ஏதுவாக அவற்றின்  சுங்கவரியை குறைக்க முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் சில எஃகு மூலப்பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும். அத்துடன் சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரியானது விதிக்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களுக்கான மூலப் பொருட்கள்  மீதான சுங்கவரியை குறைக்கவும் அரசு முடிவு செய்து இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். இப்பொருட்களைப் பொறுத்தவரையிலும் இந்தியாவின் இறக்குமதி சார்பு அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பின் சிமென்ட்விலையை குறைப்பதற்கு அதை ஈஸியாக கொண்டுசெல்லும் அடிப்படையில் நிலைமையினை மேம்படுத்துவதற்கான திட்டம் இருப்பதாக கூறினார். இதன் காரணமாக விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது” என்றும் நிதியமைச்சர்  தெரிவித்தார். இதனிடையில் நாட்டினுடைய உள் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு எஃகு,சிமென்ட் போன்றவை மிக முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி வீடு வாங்குவோர் சிமெண்ட் விலை உயர்ந்ததால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது போன்ற சூழ்நிலையில் அவற்றின் விலையை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசு உணர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |