இந்தோனேஷியா நாட்டில் பழங்குடியின மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். அவர்களில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவுக்கு இடைப்பட்ட எல்லை அருகில் உள்ள வடகிழக்கு பகுதியான போர்னியா என்ற இடத்தில் திடாங் பழங்குடியின சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களது சமூகத்தில் திருமணம் முடிந்த தம்பதியினர் முதல் மூன்று நாட்களுக்கு கழிவறை உபயோகிக்க கூடாது என்ற வினோதமான நடைமுறை உள்ளது. இந்த விதியை மீறினால் அந்த தம்பதிக்கு பயங்கர விளைவுகள் ஏற்படும். அதாவது திருமண முறிவு, துணைக்கு துரோகம் செய்தல், இளம் வயதில் குழந்தைகள் இருப்பது போன்ற சோதனைகள் ஏற்படுவது போன்றவை பழங்குடியினரின் நம்பிக்கையாக உள்ளது. அதனால் இளம் தம்பதியை கண்காணிப்பதற்காக பலர் இருப்பார்கள்.
அதுமட்டுமில்லாமல் தம்பதிக்கு குறைந்த அளவிலான உணவும் நீரும் கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் முடிந்த பிறகு அந்த தம்பதி குளிக்க வைத்து கழிவறையை பயன்படுத்த அனுமதி அளித்து விடுவார்கள். எப்போதெல்லாம் அந்த பழங்குடியின மக்களிடையே திருமண நிகழ்ச்சி நடைபெறுமோ, அப்போது இந்த வினோத நடைமுறையை தம்பதிகள் கடைப்பிடித்தே ஆக வேண்டும். இந்த சவாலை சந்தித்து அதில் வெற்றி பெறும் தம்பதியின் திருமண வாழ்வை நீடித்திருக்க முடியும் என்றும் அதனை செய்யத் தவறியவர்களுக்கு திருமண வாழ்வில் கெட்டது வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. இதனை இளம் தம்பதி எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்த போதிலும் இன்றைய காலகட்டத்தில் இந்த வினோதமான நடைமுறையை அவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.