நாடு முழுவதும் மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீடு உங்கள் வயதைப் பொறுத்தது. இதில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ஆயிரம், 2000, 3000, 4000 மற்றும் அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரை உங்களுக்கு கிடைக்கும். இது ஒரு சிறந்த பாதுகாப்பான முதலீடு திட்டம் ஆகும். இந்த திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதில் 18 வயது முதல் 40 வயதுடைய இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்பவர்களுக்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு பென்ஷன் பணம் கிடைக்கும். இதில் இணைய விண்ணப்பதாரர் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் எவ்வளவு சீக்கிரம் நீங்கள் முதலீடு செய்கிறீர்களோ அவ்வளவு அதிக பலன் உங்களுக்கு கிடைக்கும். 18 வயதில் அடல் யோஜனா பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் 60 வயதிற்கு பிறகுஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவதற்கு அவர் மாதம்தோறும் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.
39 வயதிற்கு உட்பட்ட வாழ்க்கைத் துணைகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம். மேலும் 30 அல்லது அதற்கு குறைவான வயதுடைய கணவன் மற்றும் மனைவி இருந்தால் அவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.577 இந்த கணக்கில் செலுத்தலாம். உத்திரவாதமான மாதாந்திர ஓய்வூதியத் உடன் வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் இறந்தால் உயிருடன் இருக்கும் பங்குதாரர் ஒவ்வொரு மாதமும் முழு ஆயுள் ஓய்வூதியத்துடன் 8.5 லட்சம் பெறுவார். இதில் வரிச்சலுகையும் உங்களுக்கு கிடைக்கும்.