Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெற்றோர்கள் எதிர்ப்பு… பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்…!!!

பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு கோபி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், நொன்னைய வாடியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகள் 19 வயதுடைய அகிலா. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கின்ற கல்லூரியில் பி.ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே நஞ்சகவுண்டன்பாளையம் புதுக்கோட்டையில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவருடைய மகன் 27 வயதுடைய சதீஷ்குமார். இவர் திருப்பூரில் இருக்கின்ற ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். சதீஷ்குமார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் விழுப்புரத்தில் நடந்த நண்பனின் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றார். அப்போது சதீஷ்குமாருக்கும், அங்கு வந்த அகிலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் இவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு அருகில் அவல்பூந்துறையில் இருக்கின்ற ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். இதனை அடுத்து சதீஷ்குமார் அகிலா பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த இரண்டு பேரின் பெற்றோர்களையும் அழைத்து உள்ளனர். ஆனால் அகிலா பெற்றோர் வரவில்லை. சதீஷ்குமாரின் பெற்றோர் மட்டும் வந்துள்ளனர். அவர்கள் இவர்களின்  காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டதால் அகிலா சதீஷ்குமாருடன் அவருடைய வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |