திருச்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் நேரு, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய அமைச்சர் நேரு, தமிழக அரசு மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. பேரறிவாளன் விடுதலை யின் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் தான் ஆளுநர் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள்,மக்களுக்கான திட்டங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்தக்கூடிய அரசாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுகிறது.
தா. பேட்டை ஒன்றியம் மற்றும் மன்னச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்த அரசு உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதனால் இனி திருச்சியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும். இனி தமிழகத்தில் பஞ்சம் வராது எனவும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார். மேலும் நீரேற்று பாசன திட்டத்தின் மூலமாக இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. நிதிநிலை பற்றாக்குறை காரணமாக பணிகளை உடனடியாக தொடங்க முடியவில்லை. விரைவில் இது செய்து தரப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் புதிய தார் சாலைகள், பேருந்து நிலையங்கள்,மார்க்கெட்டுகள் மற்றும் மின் மயானங்கள் என பல்வேறு கட்டமைப்பு வசதிகளை எனது துறையின் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழக மக்களுக்கான முதல்வராக மக்கள் விரும்பும் முதல்வராக முதல்வர் ஸ்டாலின் உள்ளார் என்று அமைச்சர் பேசினார்.