பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர் சங்க தலைவர் முரளி தகவல் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2019ஆம் ஆண்டு பதவி ஏற்றது முதல் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் விலை அண்மையில் அதிகரித்துள்ளது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமையல் சிலிண்டர் விலையும் ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் இன்று நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்த வகையில் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 50 ரூபாயும் குறைக்கப்பட்டது. பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என தமிழ்நாடு பெட்ரோல் டீசல் விற்பனையாளர் சங்க தலைவர் முரளி தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக அரசு தன் பங்கிற்கு விலையை குறைக்குமா என்பது தெரியவில்லை.