சிறுமியை கடத்தி சென்று முத்தம் கொடுத்த நபருக்கு மகளிர் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரியலூர் மாவட்டம் சடையப்பர் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் மாரிமுத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் தொடர்ந்து வழக்கு நடைபெற்று வந்தது .
இதையடுத்து நீதிபதி ஆனந்தன் மாரிமுத்துவை குற்றவாளி என உறுதி செய்து தீர்ப்பு வழங்கினார். அவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அவரை சிறையில் அழைத்துச் சென்று அடைத்தனர். இந்த தீர்ப்பு சிறுமிகளிடம் அத்துமீற நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று பார்க்கப்படுகிறது.