இந்த உலகில் பலரும் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைத்து வருகின்றனர். ஒருவருக்கு நல்ல வேலை கிடைப்பது என்பது தற்போது மிகவும் சிரமமாக உள்ளது. அதுவும் இந்த தொற்று காலத்தில் பலரும் வேலைகளை இழந்து அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு கூட திண்டாடி வந்தனர். தற்போது நிலைமை சீரடைந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். ஒரு சில நிறுவனங்கள் சில வித்தியாசமான வேலைவாய்ப்புகளை அறிவிக்கும். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு பெட் நிறுவனம் தங்கள் பெட்டில் தூங்கினால் 2 லட்சம் சம்பளம் என்று தெரிவித்தது.
இங்கிலாந்து நாட்டில் செயல்பட்டுவரும் ஆம்னி என்ற நிறுவனம் தங்களது உற்பத்தியான நாய் உணவை சுவைத்து அதன் விவரங்களை தருபவருக்கு சம்பளம் தருகிறது. இந்த நிறுவனம்தான் தாவர வகையிலான நாய் உணவை தயார் செய்கிறது. இதில் இனிப்பு உருளைக்கிழங்குகள், பருப்புகள், பூசணிக்காய் போன்ற காய்களும், புளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற கனிகளும் மற்றும் பட்டாணி, பழுப்பு அரிசி போன்றவையும் கலந்திருக்கும். இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு தனித்திறமை எதுவும் தேவையில்லை. நாய் உணவை சாப்பிட்டால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என இந்த வேலைக்கு வருவோர் உறுதி தர வேண்டும். ஒரு வேளை ஒவ்வாமை ஏற்பட்டால் அது பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
இப்படி ஐந்து நாட்களுக்கு நாய் உணவை சாப்பிடவேண்டும் பின்னர் அவரின் அனுபவம், உணவின் சுவை, தரம் ஆகியவற்றை கூற வேண்டும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தாங்கள் உற்பத்தி செய்யும் நாய் உணவை ஐந்து நாட்கள் சாப்பிட்டு அது பற்றி விவரங்கள் தருபவர்களுக்கு ஐந்து லட்சம் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த வேலைக்கு தேர்வாகும் நபர்களுக்கு தனித் திறன்கள் எதுவும் தேவையில்லை எனவும் அறிவித்துள்ளது. இந்த வித்தியாசமான வேலைவாய்ப்பை பார்த்துஅனைவரும் வியந்து வருகின்றனர்.