Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சாதி மாறி திருமணம்… வெடித்த பிரச்சனை… எஸ் பி வாகனம் முற்றுகை…

கரூர் மாவட்டம் கோயம்பள்ளி அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனம் முற்றுகையிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செல்லிபாளையத்தை சேர்ந்த அம்மையப்பன் என்பவரின் மகள்  காந்திமதி வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை சாதிமறுப்புத் திருமணம் செய்திருக்கிறார். அதனால் அந்த பகுதியில் உள்ள தனியார் பால் உற்பத்தியாளர் சங்கத்தில்  அம்மையப்பனுக்கு பால் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. அது குறித்து மனித உரிமை ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உற்பத்தி சங்கத்தில் விசாரணைக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஊழியர் தங்கராஜ் காவல் அதிகாரியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. அதனால் தங்கராஜ் வாகனத்தில் ஏற்றிய ஆய்வாளர் குணசேகரன் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டார். அதை கண்டித்து மக்கள் எஸ்பியின்  காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |