நிர்பயா வழக்கில் கருணை மனுக்கு எதிராக முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முகேஷ் சிங் , அக்ஷய் குமார், வினை, பவன் குப்தா ஆகிய நான்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
வரும் ஒன்றாம் தேதி தூக்கு தண்டனை என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனு நிராகரித்து நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனிடையே மற்றொரு குற்றவாளியான அக்ஷய்குமார் தரப்பில் அவரது மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.