Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு…. வெளுது வாங்கப்போகும் மழை…. புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று ஓரிரு இடங்களிலும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 24 ஆம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாளை மறுநாள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் இனிவரும் நாட்களில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Categories

Tech |