Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சுற்றி பொறாமை குணம் கொண்டவர்கள் இருந்தால் ஆபத்து”…. ஜெயம் ரவியின் மனைவி எச்சரிக்கை…!!!!!

ஜெயம் ரவியின் மனைவி இன்ஸ்டாவில் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஜெயம் ரவி. “ஜெயம்” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான இவர் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கல்யாண் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து ராஜேஷ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. இவர் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டும் வரும் நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, “உங்களை சுற்றி பொறாமை குணம் கொண்டவர்கள் இருப்பது மிகவும் ஆபத்தானது. நீங்கள் அவர்களை குடும்பத்தில் ஒருவராகவோ அல்லது நண்பராகவோ பார்த்தால் அவர்கள் உங்களை போட்டியாகவே பார்ப்பார்கள். இறுதியில் இந்தப் பிரபஞ்சம் அவர்களை களை எடுக்கும். நீங்கள் போராட வேண்டாம் என கூறியிருந்தார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஆர்த்தி யாரையோ குறிப்பிட்டு கூறியது போல தெரிகிறது என ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |