Categories
மாநில செய்திகள்

குரூப் 2, 2A தேர்வர்களுக்கு சூப்பர் நியூஸ்…. சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக காரணமாக அரசு தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை பூர்த்தி செய்யும் விதமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2A தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் முதல் கட்டமாக மார்ச் மாதம் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து இந்த தேர்வு நாளை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுவதால் தேர்வாணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 117 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் 8:30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9 மணிக்கு மேல் வருவோருக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாது என்று கட்டாயமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வுகளுக்கு உதவும் விதமாக நாளை ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |