உங்கள் கை கால்களில் அதிகமாக முடி இருந்தால் அதைப் போக்குவதற்கு இந்த டிப்ஸ்-ஐ நீங்கள் ஃபாலோ செய்யலாம். பொதுவாக சில பெண்கள் தேவையற்ற முடியை நீக்க பெரிதும் சிரமப்படுவார்கள். முன்பெல்லாம் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்தது. அதனால் இயற்கையாகவே கை, கால்களில் அதிக முடி வளர்ச்சி இருக்காது. ஆனால் சருமத்தில் உள்ள முடியை நீக்குவதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அதை பற்றி பார்ப்போம்.
எலுமிச்சை சாறுடன், சர்க்கரை, தேன் கலந்து அடுப்பில் வைத்து சூடேற்றி இதை கை பொறுக்கும் சூட்டில் எடுத்து முடி வளரும் இடத்தில் தடிமனாக பேஸ்ட் போல் போடவும். பிறகு 10 நிமிடங்கள் வரை அதை வைத்திருக்கவும். பின்னர் கைகளை சுத்தம் செய்து அதனை மிதமான நீரில் நனைத்து டிஷ்யு, வலது கைகளால் பிரித்து எடுக்கவும். 3 நாட்களுக்கு ஒரு முறை இப்படி செய்தால் முடி கொட்டிவிடும்.
கொண்டைக் கடலை மாவை சூடான பாலை சேர்த்து நன்றாக கலந்து பிறகு பேஸ்ட் பதத்திற்கு வரும்வரை கலக்கி அடர்த்தியாகவும், இந்த பேஸ்ட்டை முடி வளரும் இடத்தில் தடவவும். இது முழுவதுமாக அல்லது 80% உலர்ந்த பிறகு பருத்தி துணியை நனைத்து அழுத்தி துடைத்து சுத்தம் செய்யவும். பிறகு மிதமான வெந்நீரை கொண்டு துடைத்து எடுக்கவும்.
மூன்றாவது ஒரு முட்டையை எடுத்து அகலக் கிண்ணத்தில் சேர்த்து அதில் சோள மாவு உப்பு இரண்டையும் நன்றாக கலந்து நான்கு விரல்களில் எடுத்து முடி இருக்குமிடத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்து உலர விடவும். இது நன்றாக உலர்ந்த பிறகு அதை துடைத்து எடுக்கவும். 5 நிமிடங்கள் வரையாவது ஸ்கரப் செய்வது மிகவும் நல்லது. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை இப்படி செய்து வந்தால் முடி விரைவில் அகன்றுவிடும்.
பச்சை பயிறு ஊற வைத்து காலையில், மிக்ஸியில் போட்டு அரைத்து எலுமிச்சைச் சாறு தேன் கலந்து முடிவெடுக்கும். முடி இடத்தில் தேய்த்து ஸ்கிரப் செய்ய வேண்டும். பின்னர் உளறும் வரை காத்திருந்து பின்னர் கழுவி எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.