Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எப்படி விடுதலை செய்யலாம்?…. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு …..!!!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர்  சார்பில் போராட்டம்   நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் அமிர்த ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில்  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொது செயலாளர் அப்துல் காதர், அஞ்சம்மாள், மாவட்ட செயலாளர் ஜலாலுதீன், ராஜ்குமார், பிரகாஷ், மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி, கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் துணியை கட்டிக்கொண்டு கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Categories

Tech |