வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டையில் ராகுல்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரத்த காயங்களுடன் ராகுல் பழைய கிளாஸ்பேக்டரி சாலையோரம் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராகுலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 3 பேர் ராகுலை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதற்கிடையில் மீனாம்பாள் நகரை சேர்ந்த சங்கர், ரகுமான், சரவணன் ஆகிய 3 பேரும் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது ராகுல் கடந்த 15-ஆம் தேதி போதை மாத்திரைகள் வாங்கி தருவதாக கூறி ராகுல் மூன்று பேரிடம் இருந்தும் 20,000 ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால் மாத்திரை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திரும்பத் தராமலும் ராகுல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மூன்று பேரும் இணைந்து ராகுலை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.