மூன்று தினங்களாக அனாதையாக சுற்றித்திரிந்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டன.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லுகெட்டி என்ற இடத்தில் கடந்த மூன்று தினங்களாக ஒரு மூதாட்டி அனாதையாக சுற்றித்திரிந்து உள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் பமலா, சுகாதார ஆய்வாளர் மேஷாக், கவுன்சிலர்கள் அபிலாஷ், ஸ்டாலின், பி.கே.சிந்துகுமார், ராஜகோபால் ஆகியோர் அந்த மூதாட்டி சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது தொடர்பாக மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நடந்த விசாரணையில் அவருடைய பெயர் 65 வயதுடைய சியாமளா என்பதும், களியக்காவிளை அருகில் பொன்னப்ப நகரில் வசித்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த மூதாட்டி அவருடைய வீட்டிற்கு கூட்டிச் சென்று அவருடைய உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.