விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நிலையான சுடுகாடு இல்லாததால் மூன்று நாட்களாக உடலுடன் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொட்டியாம்பூண்டி கிராமத்தில் கடந்த 18ம் தேதி பட்டினத்தை சேர்ந்த அமுதா என்பவர் உயிரிழந்துள்ளார். அவரின் உடலை அடக்கம் செய்ய மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனே தலையிட்டு தீர்வு காணவும், எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கே பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Categories
BREAKING: 3 நாட்களாக சடலத்துடன் பொதுமக்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!!
