Categories
தேசிய செய்திகள்

UGC – NET தேர்வுக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!

உதவி பேராசிரியர் பணிக்கு நடத்தப்படும் யுஜிசி -நெட் தேர்வுக்கு மே 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகவை அறிவித்துள்ளது. அதன்படி தகுதி உள்ளவர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையத்தளத்தில் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில்  அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் கடத்தப்பட இருந்த நெட் தேர்வையும் 2022 ஆம் ஆண்டு ஜூலையில் நடக்கவுள்ள தேர்வும் ஒன்றாக நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே விருப்பமுள்ளவர்கள் இன்றுக்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ugcnet.nta.nic.in ஐப் பார்வையிட வேண்டும்.
  • முகப்புப் பக்கத்தில்  UGC NET 2021 மற்றும் 2022 பதிவுக்கான இணைப்பு காட்டப்படும். நீங்கள் அதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதையடுத்து, UGC NET பதிவு 2022 ஐ முடிக்க, விவரங்களைப் பூர்த்தி செய்து கடவுச்சொல்லை உருவாக்கவும்.
  • UGC NET 2022 உடன் உள்நுழைந்து விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்.
  • UGC NET-க்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  • இப்போது ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை பதிவேற்றவும்.
  • அதன் பிறகு கட்டணம் செலுத்தி சரிபார்த்து ஆன்லைனில் படிவத்தை சமர்ப்பிக்கவும்.

Categories

Tech |