Categories
உலக செய்திகள்

பெண் செய்தியாளர் சுட்டுக் கொலை…. இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட புது தகவல்….!!!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் பல வருடங்களாக மோதல்போக்கு ஏற்பட்டு வருகிறது. இதில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசாமுனை பகுதியிலிருந்து இஸ்ரேல்மீது சில நேரங்களில் தாக்குதல் சம்பவங்களானது அரங்கேறி வருகிறது. இவற்றிற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்தும் பதில் தாக்குதலானது நடத்தப்படுகிறது. இதனிடையில் சென்ற 11ஆம் தேதி மேற்கு கரை பகுதியில் ஜெனின் நகரிலுள்ள முகாமில் பாலஸ்தீனம்பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் உள்ளதாக கிடைத்த தகவலின்படி அங்கே இஸ்ரேலிய படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுகுறித்து செய்தியை சேகரிக்க அந்த பகுதிக்கு அல்ஜசீரா நிறுவனத்தின் பெண் செய்தியாளர் ஷெரீன் அபு அல்லெஹா சென்று இருந்தார்.

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஷெரீன் அபு அல்லெஹா சம்பவ இடத்திலேயே இறந்தார். ஷெரீன் அபு அல்லெஹா மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்..? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. அதே சமயம் செய்தியாளர் ஷெரீன் பாலஸ்தீனம் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்து இருக்கலாம் அல்லது பாதுகாப்புபடை வாகனத்திலிருந்து ராணுவவீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் இறந்திருக்கலாம் என்று இஸ்ரேல்ராணுவமானது கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தது. மேலும் அவர் மீது பாய்ந்த துப்பாக்கிக் குண்டை ஆராய்ந்து பார்த்தால் இச்சம்பவத்தை நிகழ்த்தியது யார்..? என்பதனை கூறுவோம் என்று ராணுவமானது கூறியது.

எனினும் இப்போது தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள அந்த துப்பாக்கிக் குண்டை ஆய்வுக்காக இஸ்ரேலிடம் ஒப்படைக்க பாலஸ்தீனம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் அல் ஜசீரா செய்தியாளர் ஷெரீன் அபு அல்லெஹா தங்களது பாதுகாப்புபடையினரின் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் ஷெரீனின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டை ஆய்வுக்காக தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே அதனடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டு ஷெரீன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்..? என்பது தொடர்பான உறுதியான தகவலை தெரிவிக்க முடியும் என்று ராணுவம் தெரிவித்து உள்ளது.

Categories

Tech |