Categories
பல்சுவை

ஈ முதல் விஷப்பூச்சிகள் வரை இனி எதுவுமே வீட்டில் அண்டாது…. இதோ உங்களுக்கான சில டிப்ஸ்….!!!!

நமது முன்னோர்கள் காலத்தில் வீட்டை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்திய பொருட்களை எல்லாம் அறிவியல் பூர்வமாக கிருமிநாசினி என கூறலாம். வீட்டு வாசலில் வைக்கும் மஞ்சள் கிருமி நாசினி, வேப்பிலை செருகல், மாட்டு சாணம் தெரிவிப்பது, துளசி மாடம் வைப்பது ஆகியவை வீடுகளில் கிருமி நாசினிகளை விரட்டும் தன்மை கொண்டது என்று விஞ்ஞான பூர்வமா கூறுகிறது. உலகம் முழுவதும் புதிய புதிய தொற்று நோய்கள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் வீட்டில் கிருமி அண்டாமல் எப்படி பார்த்துக் கொள்வது, ஈ முதல் தேள் விஷப்பூச்சிகள் வரை வீட்டினுள் நுழையாமல் எப்படி பார்த்துக் கொள்வது என்ற இந்த பதிவில் பார்க்கலாம்.

வேப்பிலை:

வேப்பிலை ஒரு கிருமிநாசினி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். வேப்பிலையை கொத்தாக வீட்டு வாசலில் தோரணமாய் கட்டுவதை பலரும் பார்த்திருப்பீர்கள். வேப்பிலையை அரைத்து சிறிதளவு நீர் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் வைக்க வேண்டும். இதனை வீடு முழுக்க தெளித்து விடலாம். மேலும் வேப்பிலையை அரைத்து பக்கெட் நீரில் கலந்து வீட்டின் வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்.வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பும் போது கை கால்களை அந்த நீரில் நன்றாக கழுவிவிட்டு உள்ளே வரலாம். இதனால் பெருமளவில் கிருமிகள் வராமல் தடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல் வேப்பிலையை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வீட்டிற்கு வெளியே அனைத்து மூலைகளிலும் போடுவதன் மூலம் அந்த வாசனைக்கு வீட்டில் எந்த பூச்சிகளும் வராது.

துளசி:

துளசியை சாப்பிடுவதற்கு முக்கிய காரணம் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு தான். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க துளசி உதவும். துளசி இருக்கும் இடங்களில் ஆக்சிஜன் மிகவும் சுத்தமாக இருக்கும். அதனால் அனைவர் வீடுகளிலும் கட்டாயம் ஒரு துளசி செடி இருப்பதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். துளசி இலைகளை அரைத்து நீரில் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் வைத்துக் கொண்டே படுக்கை அறையில் தெளித்து விடலாம், சமையலறையில் தெளித்தால் பூச்சிகள் நடமாட்டம் எதுவும் இருக்காது.

மஞ்சள் தூள்:

மஞ்சள் மிகவும் சிறந்த கிருமி நாசினி. பல்வேறு நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க இரண்டு கைகளையும் சோப்பு கொண்டு கழுவுங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் மஞ்சள் சுற்றி இருக்கும் இடங்களில் இருக்கும் கிருமிகளை விரட்டி அடிக்கும் தன்மை கொண்டது. நீரில் நன்றாக மஞ்சளைக் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொண்டு வீட்டை துடைக்கும்போது எல்லாம் வீட்டை சுத்தம் செய்த பிறகு மஞ்சள் கலந்த நீரை ஸ்பிரே செய்து வைத்தால் கிருமிகள் எதுவும் வீட்டில் அண்டாது. குறிப்பாக விஷ ஜந்துக்கள் எதுவும் வீட்டிற்குள் வராமல் இருக்கும். கொசுக்கள் கடிக்காமல் இருக்க மஞ்சள் தேய்த்து குளிக்கலாம். ஆண்கள் வேம்பும் மஞ்சளும் கலந்த நீரில் குளிக்கலாம். வீட்டில் கொசுக்கள் இருக்கும் போது உடலில் வேப்பிலையை அரைத்து கழுத்து மற்றும் கால் பகுதிகளில் தேய்த்து குளித்துவந்தால் கொசுக்கள் அருகில் வராது.

நொச்சி இலை:

வீட்டில் நொச்சிச் செடிகளை வளர்த்து வந்தால் அந்த வாசனைக்கு கொசுக்கள் வராமல் இருக்கும். கற்பூரத்தை நொச்சி இலையையும் இடித்துக் கலந்து பவுடராக்கி லேசாக தண்ணீரில் கலந்து கொண்டு இருக்கக் கூடிய இடங்களில் எல்லாம் தெளித்தால் அந்த வாசனை நீங்கும் வரை கொசு வரவே வராது. இந்தப் பொடியை கொசு முட்டைகள் தேங்கி இருக்கும் இடங்களில் தூவினால் கொசு முட்டைகள் வேரோடு அழிந்து விடும். மேலும் இந்த பொடியை சமையலறையில் தூவினால் கரப்பான் பூச்சி மற்றும் பள்ளிகள் கூட எட்டிப் பார்க்காது.

மூலிகை புகை:

தற்போது வெயில் காலம் அது மழை காலம் வர தொடங்கிவிட்டது. அதனால் வீடுகளில் பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனை தடுக்க வேப்பிலையை காயவைத்து மண்சட்டியில் அடுப்புக்கரி ஏற்றி அதில் சேர்த்து அதன் புகையை வீடு முழுக்க காண்பிக்க வேண்டும். இந்த வாசம் நாள் முழுக்க அப்படியே இருக்கும். இதனால் வீட்டினுள் பூச்சிகள் நடமாட்டம் எதுவும் இருக்காது.

Categories

Tech |