Categories
மாநில செய்திகள்

30 நாட்களுக்குள் கட்டட அனுமதி….. சென்னை மாநகராட்சியின் மாஸ்டர் செக்…..!!!!

கட்டிட அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை அலுவலர்கள் இழுத்தடிக்காமல் இருக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் திட்ட அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்க அந்த தொகுதிக்கு தொடர்புடைய வார்டு உதவியாளர் அல்லது இளநிலை பொறியாளர், பகுதி உதவி செயற்பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கி சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக பொறியாளர்கள் தங்கள் பகுதிகளின் கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு சென்று கட்டுமான பணிகளை ஆய்வு செய்து கட்டிட திட்ட அனுமதி உள்ளதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

இந்த ஆய்வின்படி கட்டிட திட்ட அனுமதி இல்லாத கட்டிடங்கள் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறாக கட்டுமானம் நடைபெறும் கட்டிடங்களின் கட்டுமான பணியை நிறுத்த நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்ட அனுமதி தொடர்பான விண்ணப்பங்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும். சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை மீறி 30 நாட்களுக்கு மேல் கட்டிட திட்ட அனுமதி தொடர்பான விண்ணப்பம் நிலுவையில் இருந்தால், பொதுமக்கள் முன்வந்து ரிப்பன் மாளிகையில் புகார் தெரிவிக்கலாம். அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவின் பெயரில் சென்னையில் இதுவரை 2025 கட்டிடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 467 கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |