காணாமல் போன கர்ப்பிணி பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் கொடக்காடு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். தற்போது தேவி 4 மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு சென்ற தேவி மருத்துவமனைக்கு போவதாக கூறி கடையிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் தேவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து அறிந்த செல்வம் தனது மனைவியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் செல்வம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.