Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ட்வீட் செய்த இமானின் மாஜி மனைவி”…. ரசிகர்கள் கேள்வி…!!!!

இமானின் மாஜி மனைவி போட்ட ட்விட்டர் பதிவு அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்ற டி இமான். இவர் சென்ற 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் இமான் பிரபல மறைந்த கலை இயக்குனரின் மகள் எமிலியை கடந்த மே 15 தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இமானுக்கு மோனிகா வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இதுபற்றி மோனிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, டியர் டி.இமான் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். 12 வருடங்கள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால் உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன். சென்ற இரண்டு வருடங்களாகவே உங்களின் சொந்த பிள்ளைகளையே நீங்கள் பார்க்கவும் இல்லை, கவனிக்கவும் இல்லை.

நீங்கள் இறந்திருக்கலாம் என அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால் நீங்களோ அவர்களுக்காக மறுமணம் செய்வதாக கூறுகின்றீர்கள். நீங்கள் படங்களில் நடிக்கவும் ஆரம்பிக்கலாம். என் அமைதிதான் உங்களுக்கு தைரியம் அளித்தது என்றால் அதற்காக வருத்தப்படுகிறேன். எதுவாக இருந்தாலும் உங்களின் அப்பாவிடமிருந்து என் பிள்ளைகளை பாதுகாப்பேன். மேலும் தேவைப்பட்டால் நீங்கள் தத்து எடுக்கும் புது குழந்தையையும் பாதுகாப்பேன் எனக்கூறி திருமண வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். இவரின் டுவிட்டர் பதிவை பார்த்த ரசிகர்கள் அவர் என்ன சொல்ல வருகின்றார் என கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

Categories

Tech |