கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் நான்காம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சந்திரசேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 31ஆம் தேதி பள்ளி கழிவறையில் மாணவியை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பள்ளி திறக்கப்பட்ட பிறகும் மாணவி வகுப்புக்குச் செல்ல தயாராக இல்லை. இதையடுத்தே பெற்றோர் சக மாணவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது, ஆசிரியர் கழிவறையில் தங்கள் துணிகளை களைய வைப்பதும் தங்களை தகாத முறையில் தொடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டியதாகவும் மாணவிகள் கூறியுள்ளனர். இது பற்றி பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பள்ளியை பார்வையிட்ட கல்வி அலுவலர், ஆசிரியர் சந்திரசேகரை சஸ்பெண்ட் செய்யாவிட்டால் அடித்து விரட்டுவோம் என கிராம மக்கள் எச்சரித்தனர். இதையடுத்து ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.