கல்வி நிறுவனங்களின் வாகனங்களை புதுப்பிப்பதற்க்கான ஆலோசனை கூட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் தெற்கு வட்டார போக்குவரத்து துறை சார்பில் கல்வி நிறுவனங்களின் போக்குவரத்து பிரிவு பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறப்பதற்கு முன்பு கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் ஆய்வு செய்வது வழக்கம். எனவே இந்த ஆண்டும் கல்வி நிலையங்களில் வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து வாகனங்களை புதுப்பிக்க வேண்டும், கல்வி நிறுவன வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் கூறினார். இந்த கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி, சரவணன், தனியார் கல்வி நிறுவன போக்குவரத்து பிரிவு பணியாளர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.