ஐடி நிறுவன ஊழியர்கள் இனிமேல் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2020 ஆண்டு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக கணினி, மேஜை, இன்டர்நெட் உள்ளிட்ட பல வசதிகளையும் ஊழியர்களுக்கு செய்து கொடுத்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் ஊழியர்களை மீண்டும் வேலைக்கு வரும்படி பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்து வருவதால் தங்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏராளமான ஊழியர்கள் மீண்டும் தங்களை அலுவலகத்திற்கு அழைத்தால் வேலையே வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், CIEL HR நிறுவனம் ஒரு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்துள்ளதாவது, 1000க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 50 சதவீத நிறுவனம் வீட்டில் இருந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ஐடி நிறுவனங்கள் தவிர டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதற்கான பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளது. இனி கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஊழியர்களுக்கு Work From Home என்ற நடைமுறையை வழங்க பல தனியார் நிறுவனங்கள் முன் வருகின்றனர்.