அங்கன்வாடி மையம் மற்றும் கால்நடை மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வரகூர் அங்கன்வாடி மையம், கால்நடை மருந்தகம், மாணிக்கவேலூர் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவும் விளையாட்டு பொருட்கள் தேவையான அளவு உள்ளதா, தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்துள்ளார்.
மேலும் கால்நடை மருத்துவமனைகளில் தரம், மருந்துகளின் இருப்பு, கால்நடைகளின் விவரம், கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது ஆட்சியருடன் அரசு அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.