Categories
பல்சுவை

இல்லத்தரசிகளே….! “உங்க வீட்டில இருக்கிற மிளகு நல்ல மிளகா? அல்லது போலி மிளகா?”….  ஈஸியா கண்டுபிடிக்கலாம்….!!!

நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் மிளகு தரமானதா? இல்லையா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

உணவு பொருட்களில் கலப்படம் இருப்பதை கண்டு பிடிப்பதற்கு எளிய வழிமுறைகள் பல உள்ளன. சில உணவுப்பொருட்களில் கலப்படம் இருப்பதை வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளே  கண்டறிந்துவிடலாம். அப்படி உணவுப் பொருட்கள் கலப்படமாக இருந்து அதை பயன்படுத்தும் போது உடலில் நோய் உண்டாகின்றது. நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கக்கூடிய மிளகு தரமானதா? அல்லது கலப்படமானதா? என்பதை எப்படி கண்டறிவது.

பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது பழமொழி. அந்த அளவுக்கு மிளகிற்கு சக்தி உண்டு. மிளகு விஷத்தை முறியடிக்க கூடியது. இது உடலில் இருக்கும் வாதத்தை சமநிலைப்படுத்தும். உடலிலுள்ள நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சியை தரும். மிளகு உடல் சூட்டினால் வரும் இருமல், ஜலதோசம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கொடுக்கும். தினசரி உணவில் பயன்படுத்தும் ரசத்துக்கு பிரதான பொருளே மிளகு தான். இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகு தரமானதாக இருந்தால் மட்டுமே நன்மைகள் கிடைக்கும்.

கருப்பு மிளகு என்பது இந்தியாவில் மிக முக்கியமான உணவுப் பொருள். இதில் கலப்படம் ஆக்குவது எளிது. அதனால் கலப்படம் உள்ள மிளகுக்கும் தரமான மிளகுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வது அவசியம். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது அசல் மற்றும் போலிக்கு இடையேயான வேறுபாட்டை தெரிவிப்பதில் ட்விட்டரில் ஒரு முயற்சியை தொடங்கியுள்ளனர். அதில் ஒவ்வொரு வாரமும் உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டறிவது எப்படி என கூறிவருகிறார்கள்.

அதில் கருப்பு மிளகில் போலியை கண்டறிவது குறித்த சோதனையை அவர்கள் பகிர்ந்துள்ளார். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது மிளகு கலப்படத்தை கண்டறிய எளிய சோதனை நடத்துகின்றது. சிறிய அளவு மிளகை மேஜையின் மீது வைத்து விரல் அல்லது கட்டை விரலால் அழுத்தம் கொடுக்கவும். நல்ல மிளகை நசுக்கும் போது மிளகு அவ்வளவு எளிதில் உடைக்க முடியாது. ஆனால் கலப்பட மிளகாக  இருந்தால் அதை எளிதில் நம்மால் நசுக்க முடியும். நசுக்கப்பட்ட மிளகு ஒளி வெளிர் கட்டிகளாக மாறும். இதைக் கொண்டு கலப்பட மிளகை எளிதில் கண்டறிய முடியும்.

அதையடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போடவும் சிறிதளவு மிளகு எடுத்து போடவும். மிளகு தரமானதாக இருந்தால் தண்ணீரின் அடியில் மூழ்கி விடும். போலியானவை அல்லது பப்பாளி விதையாக இருந்தால் அது நீரில் மிதக்க செய்யும். மிளகை கடித்தால் காரதன்மையுடன் இருக்கும். பப்பாளி விதையை கடித்தால் ஒரு சுவையும் இல்லாமல் இருக்கும். எனவே மிளகு சற்று வித்தியாசமாக இருந்தால் அது போலியானவையா? அல்லது உண்மை மிளகா என்பதை இந்த செய்முறைகளை வைத்து கண்டுபிடியுங்கள்.

Categories

Tech |