Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் – அமைச்சர் பாஸ்கரன்..!!

கிராம தொழில் வாரிய தலைவர்அமைச்சர் பாஸ்கரன் 27 லட்சம் ரூபாய் மதிப்பில் சிவகங்கை மாவட்டம், இலுப்பக்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மற்றும் அதன்  திட்ட பணிகளை துவங்கி வைத்துள்ளார். 

இலுப்பக்குடி கிராமத்தின் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா, புதிய திட்டப்பணி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  அமைச்சர் பாஸ்கரன்  அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் பேருந்து நிழல் குடை கட்டடம் இவைகளை  திறந்து வைத்தது, மட்டுமில்லாமல் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர விளக்கு அமைப்பதற்காகவும்,  பூமி பூஜையை தொடங்கி  வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்  மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட திட்ட அலுவலர் வடிவேல் , அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |