தமிழ் சினிமாவில் விஜயின் தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான். அதன் பிறகு பல மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்து கும்கி திரைப்படத்தின் மூலம் இவருக்கு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளர் இமான் பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்திற்கு இமானுக்கு சிறந்த இசை அமைப்பாளராக தேசிய விருது கிடைத்தது. மேலும் கடைசியாக இவர் இசையமைத்த அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் பல படங்களில் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனது மனைவியே பிரிந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டார். இதற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் இமான் தனது முன்னாள் மனைவி மீது வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதாவது தனது முன்னாள் மனைவி மோனிகா குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகவும் பாஸ்போர்ட் தொலைந்து போனதாகவும் பொய் கூறிவிட்டு புது பாஸ்போர்ட் வாங்கியதாக தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த மோனிகா குழந்தைகளின் பாஸ்போர்ட்டை கேட்டபொழுது அவர் தொலைந்து போனதாக கூறி, தர மறுத்ததால் தான் நான் புது பாஸ்போர்ட் விண்ணப்பித்துள்ளேன் என்று அவர் கூறினார். மேலும் குழந்தைகளின் கஸ்டடி உரிமையை வைத்திருக்கும் தனக்கே முழு உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளார். எனவே இதை வைத்து பார்க்கும்போது இமான் தனது முன்னாள் மனைவி மோனிகா மீது பொய் வழக்கு போட்டுள்ளார் என்பது தெரிகிறது. இந்நிலையில் குழந்தைகளின் கஸ்டடி வைத்திருக்கும் மோனிகாவை தவிர இமானுக்கு குழந்தைகளின் பாஸ்போர்ட் வைத்திருக்கும் உரிமை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.