Categories
மாநில செய்திகள்

JUSTIN: திரைப்பட சிறப்பு காட்சிகளுக்கு எதிராக வழக்கு….! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

திரையரங்குகளில் சட்டவிதிகளை மீறி சிறப்பு காட்சிகள் திரையிடபடுவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: “அதிகாலை ஒரு மணி முதல் காலை 9 மணி வரை எந்த காட்சியையும் திரையிடக் கூடாது என்ற விதியை மீறி சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகின்றன. அதிக கட்டணம் வசூலித்து பொதுமக்கள் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். இப்படி செய்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக வழக்கு” தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டவிதிகளை மீறி சிறப்பு காட்சிகளை வெளியிடுகிறதா? என்று தமிழக அரசும் காவல் துறையும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |