Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே….! டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்…. இனி இப்படி தா முன்பதிவு செய்யணும்….!!!!

டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை ஐஆர்சிடிசி அதிரடியாக மாற்றம் செய்து அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும்  டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் ஆப்-பைப் பயன்படுத்தி  ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் செயல் முறையில் சில திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டும்.

வெரிஃபிகேஷனை பூர்த்தி செய்யாதவர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த இரண்டு விவரங்களை சரிபார்க்காத பயனாளர்கள் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. இந்த மாற்றமானது கொரோனா நோய் தொற்று தொடங்கியது முதல் தற்போது வரை ஆப் அல்லது இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மட்டும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |