Categories
மாநில செய்திகள்

பேரறிவாளன் விடுதலை….. “வரலாற்றில் நினைவுகூரத்தக்கது இந்த தீர்ப்பு”….. மு க ஸ்டாலின் பெருமிதம்….!!!!

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர் முக ஸ்டாலின்,” உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி சட்ட ஆலோசனை நடத்தி மற்ற ஆறு பேரையும் விடுவிக்க முயற்சி எடுப்போம். நீதி, சட்டம், அரசியல், நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெற தக்க தீர்ப்பு இது. மாநிலத்தின் உரிமை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வாதங்களை முழுமையாக ஏற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசு தனது உரிமையை நிலைநாட்ட எடுத்த முயற்சிகள் அனைத்துக்கும் கிடைத்த வெற்றி இது.

அற்புதம்மாள் தாய்மையின் இலக்கணம், பெண்மையின் திண்மையை நிரூபித்துள்ளார். சட்டத்தின் சரத்துக்களை வெல்லும் திறன் ஒருதுளி நியாயமான கண்ணீருக்கு உண்டு என்பதை காலம் காட்டியிருக்கிறது. மாநில அரசின் கொள்கை முடிவில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என நீதிபதிகள் கூறி இருப்பது மிக மிக முக்கியமானது. தமிழ்நாடு அரசால் இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவத்துக்கு கிடைத்த வெற்றி. பேரறிவாளன் என்ற தனிமனிதனின் விடுதலை மட்டுமல்ல. கூட்டாட்சி தத்துவம், மாநில சுயாட்சி மாண்புக்கு இலக்கணமாக அமைந்துள்ள இந்த தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவுகூரத் தக்கது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Categories

Tech |