தென்னாபிரிக்காவில் கறுப்பின மாணவர்களின் உடமைகளில் வெள்ளை இன மாணவர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேப் டவுன் அருகே அமைந்திருக்கும் ஸ்டெல்லன்போஷ் பல்கலைக்கழகத்தின் குடியிருப்பில் உள்ள கருப்பின மாணவர் ஒருவர் அறைக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு வெள்ளை இன மாணவர் நுழைந்ததாக கூறப்படுகின்றது. அந்த வெள்ளையின மாணவன் கருப்பின மாணவர்களின் உரிமைகளில் சிறுநீர் கழிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
தென்னாபிரிக்காவின் புகழ்பெற்ற உயர்மட்ட பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர் ஒருவர் தன்னுடன் படித்துவரும் சக கருப்பின மாணவர்களின் உடமைகளில் சிறுநீர் கழித்த கீழ்த்தரமான நிகழ்விற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் அந்த மாணவனின் செயலை விட அவருடைய பேச்சு வக்கிரம் நிறைந்ததாக இருந்திருக்கின்றது. இது பற்றி அவர் கூறியதாவது, வெள்ளையர்கள் கருப்பினத்தவர்களிடம் இதைத்தான் செய்வார்கள் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட மாணவன் திங்கட்கிழமை அன்று பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
மேலும் இந்த சம்பவத்தை செல்போனில் வீடியோ பதிவுசெய்த பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தியதன் காரணத்தால் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தில் உயர்கல்விக்கான குழு இந்த இனவெறி மற்றும் பாகுபாட்டின் வெளிப்பாடான இந்த செயலை வன்மையாக கண்டிக்கின்றது. பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர் பிரதிநிதி கவுன்சில் மற்றும் மாணவர் சமூகம் போன்றவை இனமற்ற மற்றும் உள்ளடக்கிய கல்வி நிறுவனத்திற்கு ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டுமென தெரிவித்திருக்கின்றது. இந்த நிலையில் இந்த இனவெறி செயலுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் தென்னாப்பிரிக்க மாணவர் காங்கிரஸ் மற்றும் சமூக ஊடக பயனர்கள் போன்றோர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
மேலும் பல்கலைக்கழகத்தில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் திங்கட்கிழமை அன்று இந்த இனவெறி செயலுக்கு எதிராக போராட்டம் நடத்தி இருக்கின்றனர். வரலாற்று ரீதியாக நெடுங்காலமாக இந்த பல்கலைக்கழகம் வெள்ளை இன மாணவர்களுக்கானதாக இருந்து வந்திருக்கின்றது. 2021-2022 கல்வியாண்டில், அங்கு பயின்று வரும் மாணவர்களில் 54.4 சதவீதம் பேர் வெள்ளையர்களாகவும், 22.5 சதவீதம் பேர் கறுப்பர்களாகவும் இருப்பதாக அதிகாரப்பூர்வ தரவு தெரிவிக்கிறது. இதன் காரணமாக, இனவெறி பாகுபாடு தவிர்க்க முடியாததாக அங்கு பரவி இருக்கிறது.