Categories
உலக செய்திகள்

OMG: இதுவரை இல்லாத அளவிற்கு உணவு பஞ்சம் ஏற்படும்…. ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!!!!!

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வருடம் உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு தனி மனிதனுக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் எனக்கூறியவர் பாரதி. ஆனால் இந்த வருடம் இதுவரை இல்லாத அளவிற்கு உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோன்று மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறது. அதாவது 2050ஆம் ஆண்டிற்குள் 40 லட்சம் சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி வறுமையால் பாதிக்கப்படும் என்றும்  40 இலட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பும் என்பது இந்தியாவும், பாகிஸ்தானும் சேர்ந்து நிலப்பரப்பின் அளவாக இருக்கும்.

மேலும் பூமியில் ஒரு கண்டமே வறட்சியால் பாதிக்கப்பட்டால் எவ்வாறு இருக்கும் இதே நிலை நீடித்தால் விரைவில் தென் அமெரிக்கக் கண்டம் அளவிலான நிலப்பகுதி வறட்சி ஆகிவிடுமாம். ஏற்கனவே உலக அளவில் 230 கோடி மக்கள் தினமும் நீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்ற நிலையில் இன்னும் எட்டு வருடங்களில் வறட்சியால் உணவு கிடைக்காமல் 70 கோடி மக்கள் உணவு கிடைக்காமல் இடம்பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வறட்சியால் பாதிக்கப்படுவதிலிருந்து வல்லரசு நாடுகள் கூட தப்பிக்க முடிவதில்லை பற்றி எரியும் கலிபோர்னியா, பிரேசில், ஆஸ்திரேலியா காட்டுத்தீ சம்பவங்களில் இதற்கு காரணமாகிறது. அந்தவகையில் கடந்த இரண்டு வருடங்களாக வறட்சியால் வறண்டு போயிருக்கின்ற நாடுகளின் பட்டியலில் நமது அண்டை நாடான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் போரினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். போரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகள் மட்டுமின்றி அமெரிக்காவும் இடம் பிடித்திருக்கின்றது.

மேலும் இதில் கடந்து நூற்றாண்டில் ஆசிய நாடுகள்  கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. கடந்த 2000 முதல் 2019 ஆம் வருடம் வரை மட்டுமே சுமார் 140 கோடி மக்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் தான் ஏற்கனவே பூமியில் 40 சதவிகிதம் நிலம் வறட்சியால் முற்றிலும் சீரழிந்து இருக்கின்ற நிலையில் வறட்சியின் பிடியில் இருந்து தப்பிக்க விட்டால் உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 50 சதவிகிதம் பாதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |