Categories
தேசிய செய்திகள்

வரும் 20 ஆம் தேதி முதல்…. கல்லூரி மாணவர்களுக்கு…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

நாடு முழுதும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இப்போது வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை இருக்கிறது. இதன் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கோடைவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுத்து வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவிலுள்ள ஜூனியர் கல்லூரிகளுக்கு மே 20ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் ஜூன் 15ம் தேதி மீண்டுமாக ஜூனியர் கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் 2022-23 கல்வி ஆ ண்டுக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டு உள்ளது.

தெலுங்கானா இன்டர் போர்டு 221 வேலைநாட்களுடன் கல்வி ஆண்டை அமைத்து இருக்கிறது. மேலும் வகுப்புகள், தேர்வுகள் மற்றும் விடுமுறைகளுக்கான அட்டவணையை இன்டர்போர்டு அறிவித்துள்ளது. முதல் நிலை வகுப்புகள் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் எனவும் இடைநிலை வகுப்புகள் ஜூன் 15ஆம் தேதி தொடங்கும் எனவும் இன்டர் போர்டு தெரிவித்துள்ளது. அக்டோபர் 2-9 வரை இன்டர் மாணவர்களுக்கு தசரா விடுமுறை எனவும் சங்கராந்தி விடுமுறை ஜனவரி 13 -15, 2023 வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. வரும் புது கல்வியாண்டில் இறுதிக்கட்ட தேர்வுகள் பிப்ரவரி 6 முதல் 13 வரை நடைபெறும்.

அத்துடன் நடைமுறைகளுக்கு இடையிலான தேர்வுகள் பிப்ரவரி 20 முதல் மார்ச் 6 வரை நடைபெறும். ஆண்டுக்கு இடையிலான தேர்வுகள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெறும். அடுத்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படும். பின் ஜூன் 1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். இன்டர் அட்வான்ஸ்டு சப்ளி மெண்டரி தேர்வுகள் மே 2023 இறுதிவாரத்தில் நடைபெறும் என இன்டர் போர்டு தெளிவுபடுத்தி இருக்கிறது. இது தொடர்பான முழு விபரங்களையும் இன்டர் போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tsbie.cgg.gov.in/ சென்று அறிந்துகொள்ளலாம்.

Categories

Tech |