Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையை சீரமைக்கக்கோரி… பொதுமக்கள் மறியல் போராட்டம்…!!!!

சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து மூலப்பட்டறை செல்லும் ஈ.வி.கே சம்பத் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த நிலையில் பல தினங்களாக சாலை சீரமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக வண்டிகள் செல்லும்போது புழுதி பறந்துள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் ரோட்டில் ஜல்லி கற்கள் போடப்பட்டுள்ளது. ஆனால் தார்சாலை போடவில்லை. ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து நாமக்கல், பவானி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இந்த வழியாகத்தான் செல்கின்றனர். இதனால் அந்த பகுதி புழுதி மண்டலமாக காட்சி அளிக்கின்றது. சாலை ஓரமாக இருந்த வீடுகள், கடைகளில் புழுதி படிந்துள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் கடைக்காரர்கள் உட்பட பொதுமக்கள் ஈரோடு பேருந்துநிலையம் அருகே ஈ.வி.கே ரோட்டில் திடீரென்று அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

இத்தகவலை அறிந்த ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது, ஈ.வி.கே சம்பத் சாலையில் வண்டிகள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனால் சுவாசப்பிரச்சனை ஏற்படுகின்றன. எனவே தார் சாலை போட வேண்டும் என்று பலமுறை நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இதுவரை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் கடந்த 10 தினங்களாக குடிநீர் வினியோகம் செய்ய வில்லை. அதற்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் குடிநீருக்கு குழாய்கள் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்த பிறகு சாலை சீரமைக்கப்படும் என்று கூறினார்கள். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக ஈரோடு பேருந்து நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |