ஜப்பான் நாட்டில் Onomichi city Museum of Art என்ற அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வேலை பார்க்கும் காவலாளிக்கு ஒரு பூனைக்கும் இடையில் 2 வருடங்களாக சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அதாவது அந்தப் பூனை அருங்காட்சியகத்திற்குள் நுழைவதற்கு 2 வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் காவலாளி பூனையை அருங்காட்சியகத்திற்கு செல்லவிடாமல் தடுக்கிறார்.
இந்நிலையில் அந்தப் பூனைக்கு துணையாக மற்றொரு பூனையும் அருங்காட்சியகத்திற்கு வரத் தொடங்கியது. இந்த 2 பூனைகளும் 2 வருடங்களாக அருங்காட்சியகத்தில் செல்வதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்கிறது. ஆனால் காவலாளி பூனைகளை அருங்காட்சியகத்தில் அனுமதிக்க மாட்டார். மேலும் இந்த 2 பூனைகளை பார்ப்பதற்காகவே ஏராளமான மக்கள் அருங்காட்சியகத்திற்கு வர ஆரம்பித்துள்ளனர்.